இந்தோனீசியா: தேவாலயத்திற்கு வெளியே வெடிப்புச் சம்பவம்

இந்தோனீசியா: தேவாலயத்திற்கு வெளியே வெடிப்புச் சம்பவம்

1 mins read
5f894823-9007-466e-8d5c-d7fd0a9589f8
வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் போலிஸ் அதிகாரிகள். படம்: இபிஏ -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் தெற்கு சுலா­வேசி மாநி­லத் தலை­நகர் மக்­கா­சா­ரில் கத்­தோ­லிக்க தேவா­ல­யத்­திற்கு வெளியே நேற்று நிகழ்ந்த வெடிப்­புச் சம்­ப­வத்­தில் தற்­கொலை வெடி­குண்டு தாக்­கு­தல்­கா­ரர்­கள் இரு­வர் கொல்­லப்­பட்­ட­னர். இதில் 14 பேர் காய­ம் அடைந்­த­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தின்­போது தேவா­ல­யத்­திற்­குள் வழி­பா­டு­கள் நடை­பெற்­றுக்கொண்­டி­ருந்­தன. அப்­போது மோட்­டார்­சைக்­கிள் ஒன்­றில் வந்த இரு­வர், தேவா­லய வளா­கத்­திற்­குள் நுழைய முயன்­ற­தா­க­வும் தேவா­லய பாது­கா­வ­ல­ரால் அவர்­கள் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் தேசிய போலிஸ் பேச்­சா­ளர் அர்கோ யுவோனோ செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

பின்­னர் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று காலை 10.20 மணிக்கு தேவா­ல­யத்­திற்கு வெளியே சாலை­யின் நடுவே வெடிப்பு ஏற்­பட்டு, தீயும் புகை­யும் கிளம்­பின.

இச்­சம்­ப­வத்­தில் காய­ம­டைந்­தோ­ருக்கு அரு­கி­லுள்ள மருத்­து­வ­மனை­களில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பயங்­க­ர­வா­தச் சம்­ப­வத்­திற்கு இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வத்தை விசா­ரிக்­கு­மா­றும் தாக்­கு­தல் நடத்த திட்­ட­மிட்ட சந்­தேக நபர்­கள் தொடர்­பு­டைய பயங்­க­ர­வாத அமைப்­பைத் துடைத்­தொழிக்­க­வும் தேசிய போலிஸ் தலை­வ­ருக்கு அதி­பர் விடோடோ உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இந்த வெடிப்­புச் சம்­ப­வத்துக்கு நேற்றைய நில­வ­ரப்­படி எந்­த­வொரு தரப்­பும் உட­ன­டி­யாக பொறுப்­பேற்­க­வில்லை.

இதில் உயி­ரி­ழந்த தற்­கொலை வெடி­குண்டு தாக்­கு­தல்­கா­ரர்­கள் எந்­த பயங்­க­ர­வாத அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் என்பது குறித்து போலிஸ் விசா­ரித்து வரு­கிறது.

அண்­மை­யில், சில பயங்­க­ர­வாதி­க­ளைப் போலி­சார் கைது செய்­தி­ருந்த நட­வ­டிக்­கைக்­கும் தேவா­லய வெடிப்­புக்­கும் ஏதே­னும் தொடர்­புள்­ளதா என்ற கோணத்­தி­லும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.