மோடிக்கு எதிராக நேற்றும் பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டம்

மோடிக்கு எதிராக நேற்றும் பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டம்

1 mins read
0c92767e-5c28-41dc-9ed1-aabcee00163e
முக்கிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை எரித்து வீதிகளில் போராடினர். படம்: இபிஏ -

டாக்கா: பங்­ளா­தே­ஷில் போலி­சா­ருக்­கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் இடையே நேற்று ஏற்­பட்ட மோத­லில் 19 வயது இளை­யர் உயி­ரி­ழந்­தார். இச்­சம்­ப­வத்­தில் குறைந்­தது 15 பேர் காய­முற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­தி­ரம் பெற்று 50 ஆண்டு­கால நிறைவை பங்­ளா­தேஷ் குறித்தது. அதையொட்டி, இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று முன்­தி­னம் அந்­நாட்­டிற்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டார்.

அவ­ரது வரு­கையை எதிர்த்து இஸ்­லா­மிய அமைப்பு ஒன்­றைச் சேர்ந்­த­ பலர் வீதி­களில் ஆர்ப்­பரித்­த­னர். இந்­தி­யா­வில் முஸ்லிம்­களுக்கு எதி­ராக திரு மோடி சமூக வன்­மு­றை­யைத் தூண்டி­விட்­ட­தாக அவர்­கள் அவர் மீது குற்­றஞ்­சாட்­டி­னர்.

பங்­ளா­தேஷ் தலை­ந­கர் டாக்­கா­வுக்கு வெளியே நேற்று நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டம் ஒன்­றில் திரு மோடிக்கு எதி­ராக "நட­வ­டிக்கை, நட­வ­டிக்கை, நேரடி நட­வ­டிக்கை" என்ற வாச­கங்­களை முழக்­க­மிட்­ட­னர். டாக்­காவை சிட்­டகாங் துறை­மு­கத்­து­டன் இணைக்­கும் முக்­கிய நெடுஞ்­சா­லையை அவர்­கள் முற்­று­கை­யிட்­ட­னர்.

நூற்­றுக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் சாலை­களில் அறை­கலன்­க­ளை­யும் டயர்­க­ளை­யும் எரித்­த­னர். நெடுஞ்­சா­லையை அவர்­கள் முற்­று­கை­யிட்­ட­தால் போலி­சார் கண்­ணீர்ப் புகை குண்­டு­க­ளை­யும் ரப்­பர் தோட்­டாக்­க­ளை­யும் வீசி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைத்தனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­வர்­களில் ஐவர் போலி­சா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.