பராக் ஒபாமாவின் பாட்டி காலமானார்

பராக் ஒபாமாவின் பாட்டி காலமானார்

1 mins read
bb24592c-bda7-4731-ae6b-a026aa21bf98
பராக் ஒபாமாவின் பாட்டி சாரா ஒபாமா காலமானார். படம்: ஏஎஃப்பி -

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி கென்யாவில் காலமானார். அவருக்கு 99 வயது. திருவாட்டி சாரா ஒபாமாவின் மரணம் குறித்து அவரது மகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரமாக திருவாட்டி சாரா ஒபாமா உடல்நலமின்றி இருந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு கொவிட்-19 பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

கென்யாவில் இருக்கும் தமது பாட்டியின் மரணத்தைப் பற்றி தெரிய வந்ததும் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்ததாக அவரது உறவினர்கள் கூறினர்.