நியூயார்க்கில் அறிமுகம்; 'கொவிட்-19 டிஜிட்டல் பாஸ்'

நியூயார்க்கில் அறிமுகம்; 'கொவிட்-19 டிஜிட்டல் பாஸ்'

2 mins read
ca1721db-1061-4ce8-a275-918451fc50c6
'Excelsior Pass' செயலியை ஐபிஎம் நிறுவனத்துடன் சேர்ந்து நியூயார்க் தயாரித்து உள்ளது. படம்: covid19vaccine.health.ny.gov -

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வி­லேயே முதல்­மு­றை­யாக நியூ­யார்க் மாநி­லத்­தில் 'கொவிட்-19 டிஜிட்­டல் பாஸ்' அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

தனிப்­பட்ட நபர்­க­ளின் தடுப்பூசி பற்­றிய விவ­ரங்­கள், கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வுக­ள் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

நியூ­யார்க்­கில் விரை­வில் வர்த்­த­கங்­கள், விளை­யாட்டு நிகழ்ச்­சி­கள், பொழு­து­போக்கு விடு­தி­களை திறக்­கும் நோக்­கத்­தில் புதிய செயலி அறி­மு­கம் கண்­டுள்­ளது.

'ஐபி­எம்' நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து நியூ­யார்க் உரு­வாக்­கிய செயலி 'Excelsior Pass' என அழைக்­கப்­படுகிறது. விமா­னப் பய­ணச்சீட்­டு­களை போலவே கைபே­சி­யில் இந்­தச் செய­லி­யையும் காட்டி தேவை­யான இடங்களில் நுழை­ய­லாம்.

பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு 'கியூ­ஆர்' குறி­யீட்­டு­டன் மின்­னி­லக்க நுழை­வுச் சீட்டு வழங்­கப்­ப­டு­கிறது.

இதனை அச்­சிட்டு அல்­லது கைபே­சி­யில் சேக­ரித்து வைக்­க­லாம். இந்­தத் திட்­டத்­தில் பங்­கேற்­றுள்ள வர்த்­த­கர்­கள் அந்த 'கியூ­ஆர்' குறி­யீட்டை வருடி வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தடுப்­பூசி தக­வல்­களை தெரிந்­து­கொள்­ளலாம்.

பொது­மக்­க­ளின் தர­வு­கள் மிக­வும் பாது­காப்­பா­க­வும் ரக­சி­ய­மா­க­வும் வைக்கப்படும் என்று நியூ­யார்க் உறு­தி­ய­ளித்­துள்­ளது.

"மக்­க­ளின் சுகா­தா­ரம் முக்­கி­யமா, பொரு­ளி­யல் முக்­கி­யமா என்று கேட்­டால் இரண்­டுமே முக்­கி­யம் என்ேபன்," என்று நியூ­யார்க் ஆளு­நர் ஆண்ட்ரு குவோமோ தெரி­வித்­தார்.

தனி­யார் துறை­யி­னர் மற்­றும் லாப நோக்­கற்ற அமைப்­பு­கள் தடுப்­பூசி கடப்­பி­த­ழைத் தயா­ரிக்­கும் முயற்­சி­களில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றின் தரம் உறுதி செய்யப்பட வேண்­டும் என்று வெள்ளை மாளி­கை­யின் பேச்­சா­ளர் ஜெப்­ஃரி ஸியனண்ட்ஸ் இம்­மா­த தொடக்­கத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

விளை­யாட்டு அரங்கம், திரு­மண விருந்து அல்லது இதர சமூக ஒன்­று­கூ­டல் போன்ற இடங்களில் புதிய செயலி பயன் படுத்தப்படும்

நியூ­யார்க் நக­ரத்­தில் 20,000 இருக்­கை­க­ளைக் கொண்ட மெடி­சன் ஸ்கொ­யர் கார்­டன், வரும் வாரங்­களில் இத்­த­கைய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தப் போவ­தாக கூறியுள்ளது.

தொடக்­க­மாக ஏப்­ரல் 2ஆம் தேதி­யி­லி­ருந்து சிறிய கலை, பொழு­து­போக்கு நிலை­யங்­களில் இந்­தச் செயலி பயன்­ப­டுத்­தப்­பட விருக்கிறது.