தொற்று அதிகரிப்பு; பிரிஸ்பேன் நகரம் மூன்று நாட்கள் முடக்கம்

தொற்று அதிகரிப்பு; பிரிஸ்பேன் நகரம் மூன்று நாட்கள் முடக்கம்

1 mins read
66b34238-9bda-46ea-9c4a-7911acb78e2a
-

பிரிஸ்­பேன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பிரிஸ்­பேன் நக­ரில் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து உள்­ள­தால் அந்­ந­க­ரம் மூன்று நாட்­க­ளுக்கு முடக்­கப்­பட்­டுள்­ளது. குவீன்ஸ்­லாந்து தலை­ந­க­ர­மான பிரிஸ்­பே­னில் ஏறக்­கு­றைய இரண்டு மில்­லி­யன் பேர் வசித்து வரு­கின்­ற­னர்.

அங்கு ஏழு பேர் வரை கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

உள்­ளூர் நேரப்­படி நேற்­றுக் காலை 6.00 மணிக்கு முடக்­கம் தொடங்­கி­யது.

கடந்த ஜன­வ­ரி­யில் ஒரு­வர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தால் மூன்று நாட்­கள் பிரிஸ்­பேன் முடக்­கப்­பட்­டது.

ஆனால் சமூ­கத்­தில் கிருமி தொற்­றி­யது எப்­படி என்­பது புரி­யா­மல் சுகா­தார அதி­கா­ரி­கள் குழப்­ப­ம­டைந்­துள்­ள­னர்.

இதற்­கிை­டயே செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய குவீன்ஸ்­லாந்து மாநில முதல்­வர் அன்­னாஸ்­டே­சியா பல­ஷுக், மேலும் நான்கு தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்டுபிடிக்­கப்­பட்­டுள்­ளது சமூ­கத்­தில் கிருமி பர­வு­ வ­தைக் காட்­டு­கிறது என்­றார்.

கடந்த சனிக்­கி­ழமை சமூ­கப் பர­வலின் முதல் சம்­ப­வம் பதி­வா­னது. கிரு­மித்­தொற்று தொடர்­பு­க­ளின் தடங்­களை அறிய முடக்­கம் மிக­வும் அவ­சி­யம் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். "இது ஒரு சிர­ம­மா­னப் பணி­தான், ஈஸ்­டர் தினம் வரு­கிறது. பள்ளி விடு­மு­றை­யும் தொடங்கு கிறது. அதற்­குள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­தாக வேண்­டும்," என்று முதல்­வர் அன்­னாஸ்­டே­சியா கூறி­னார்.