சூயஸ் கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது

சூயஸ் கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது

1 mins read
c77df516-7593-40fd-823d-51a152817cc6
உலகின் ஆகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான எவர் கிரீன் சரக்குக் கப்பல் கடந்த ஆறு நாட்களாக சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்றது. அந்தக் கப்பலை டச்சு நாட்டு நிறுவனத்தின் உதவியுடன் எகிப்தின் சூயஸ் கால்வாய் ஆணையம், கப்பல் தரைதட்டிய கடல்பகுதியை ஆழப்படுத்தி, சக்திவாய்ந்த இழுவைகளின் உதவியுடன் கப்பலை மிதக்க வைத்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

கெய்ரோ: சூயஸ் கால்­வா­யில் தரை­தட்டி ஆறு நாட்­க­ளாக வழியை அடைத்­துக் கொண்டு நின்ற உலகின் நீள­மான எவர்­கி­ரீன் சரக்­குக் கப்­பல், இழு­வை­க­ளின் உத­வி­யால் மீண்­டும் நக­ரத் தொடங்­கி­யது.

அதை­ய­டுத்து அவ்­வ­ழியே கப்­பல் போக்­கு­வ­ரத்து தொடங்­கி­யது. அவ்­வ­ழி­யைக் கடக்­க­ மு­டி­யா­மல் 422 கப்­பல்­கள் அக்­க­டல் பகு­தி­யில் காத்­துக்­கொண்­டி­ருந்­தன.

அவை யாவும் மூன்­றரை நாட்­க­ளுக்­குள் சூயஸ் கால்­வா­யைக் கடந்­து­செல்­லும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சூயஸ் கால்­வாய் ஆணை­யத்­தின் தலை­வர் ஒசாமா ரேபி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டதால் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான கடல்வழி சரக்குப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

அந்த சரக்­குக் கப்­பல் மார்ச் 23 ஆம் தேதி சூயஸ் கால்­வா­யைக் கடக்­கும்­போது பலத்த காற்று வீசி­ய­தால் குறுக்­கு­வாட்­டில் திரும்­பி­யது. அப்­போது அக்­கப்­பல் தரை­தட்­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

குறுக்­கு­வாட்­டில் கிடந்த கப்­பலை நேர்ப்­ப­டுத்­தும் பணி­யில் டச்சு நாட்டு நிறு­வ­னத்­து­டன் சூயஸ் கால்­வாய் ஆணை­யத்­தின் ஊழி­யர்­கள் இணைந்து மீட்­புப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது சக்­தி­வாய்ந்த இழு­வை­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு நீண்ட போராட்­டத்­திற்­குப் பின்­னர் கப்­பல் ஆழ­மான நடுப்­ப­கு­திக்கு இழுத்து நகர்த்தப்பட்டதாகக் கூறப்­பட்­டது.

எவர்கிரீன் லைன் கப்பலின் முன்பகுதி சேதமடைந்திருந்தாலும் கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சரக்குக் கொள்கலன்களுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.