'குவீன்ஸ்லாந்தில் கொவிட்-19 அதிகரிக்கக்கூடும்'

'குவீன்ஸ்லாந்தில் கொவிட்-19 அதிகரிக்கக்கூடும்'

1 mins read
fccea89f-086c-44dc-98a0-e7545b0abcc6
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவீன்ஸ்­லாந்து மாநி­லத்­தில் புதி­தாக 9 சமூ­கத் தொற்று பதி­வா­கி­யுள்­ளது. அத­னை­ய­டுத்து கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அம்­மா­நி­லம் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. பிரிட்­ட­னின் உரு­மா­றிய கிரு­மித்­தொற்­றைத் தடுக்க அர­சாங்­கம் தீவி­ர­மான நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டுள்­ளது.

பிரிஸ்­பே­னில் மூன்று நாட்­கள் முடக்­க­நி­லை அறி­விக்­கப்­பட்ட மறு நாள் அங்கு 15 புதிய தொற்­றுப் பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது. இவை அனைத்­தும் இரண்டு குறிப்­பிட்ட இடங்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். ஒன்று மருத்­து­வ­ரி­ட­மும் மற்­றொன்று செவி­லி­யர் ஒரு­வ­ரி­ட­மும் தொடர்­பு­டை­யது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இந்த முடக்­க­நிலை அறி­விப்­பால் பிரிஸ்­பே­னில் வசிக்­கும் சுமார் 2 மில்­லி­யன் பேர், வியா­ழக்­கி­ழமை வரை வீட்­டில் முடங்­கிக்­கிடக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் நாம் எச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் குவீன்ஸ்­லேண்ட் மாநி­லத்­தின் முதல் அமைச்­சர் அன்­னாஸ்­ட­சியா மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.