மலேசிய பிரதமர்: அமைச்சரவையில் அம்னோ அமைச்சர்கள் நீடிப்பார்கள்

மலேசிய பிரதமர்: அமைச்சரவையில் அம்னோ அமைச்சர்கள் நீடிப்பார்கள்

1 mins read
c7acae88-998e-48ac-9148-7f164f692224
-

புத்­ரா­ஜெயா: தற்­போதைய அமைச்­ச­ர­வை­யில் அம்னோ அமைச்­சர்­கள் நீடிப்­பார்­கள் என்று மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரி­வித்­தார்.

அமைச்­ச­ர­வை­யில் தொடர்ந்து பணி­யாற்ற அவர்­கள் ஒப்­புக் கொண்­ட­தா­க­வும் அவர் சொன்னார்.

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­தும் ஆளும் கூட்­ட­ணி­யு­ட­னான உறவு முடி­வுக்கு வரும் என்று அம்னோ தலை­வர் அக­மட் ஸாஹிட் ஹமிடி கூறி­யதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.

அம்னோ அமைச்­சர்­கள் பதவி விலக வேண்­டும் என்­று ஆளும் கூட்­டணி தரப்­பி­லி­ருந்து கோரிக்கை எழுந்தது.

இதை­ய­டுத்து தனது அமைச்­சர்­கள் பதவி வில­கத் தயார் என்று அம்னோ அறி­வித்­தது.

இந்த நிலை­யில் அம்னோ அமைச்­சர்­கள் தொடர்ந்து அமைச்­ ச­ர­வை­யில் நீடிக்க உடன்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இது குறித்­துப் பேசிய பிர­த­மர் முகை­தீன் யாசின், "நாடு சிர­ம­மான கால­க்­கட்­டத்­தில் உள்­ளது. கொவிட்-19 சூழலை சமா­ளித்­தாக வேண்­டும். தடுப்­பூசித் திட்­டத்தை நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது. நாட்டு நலனே முக்கியம்," என்று குறிப்­பிட்­டார்.

நேற்று காலை வெளி­யிட்ட அறிக்­கை­யில் அம்னோ கட்­சி­யி­னர் தன்­னு­டைய யோச­னையை ஏற்று அமைச்­ச­ர­வை­யில் இருக்க சம்­மதித்து உள்ளதாக பெர்சத்துக் கட்சியின் தலைவருமான பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரிவித்தார்.