லாகூர்: பரம விரோதிகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தணிந்து அமைதி காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக நாட்டின் பொருளியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து உத்தேச திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்ரான் கான்தான் இறுதி முடிவை எடுப்பார் என்று தனிப்பட்ட விவகாரமாக இருப்பதால் பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பற்றி கருத்தறிய முயற்சி செய்தபோது பாகிஸ்தானின் வர்த்தகப் பிரிவு பதிலளிக்க மறுத்து விட்டது.
முஸ்லிம் பெரும்பான்மை யினர் வசிக்கும் தனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை 2019 ஆகஸ்ட் மாதம் இந்தியா ரத்து செய்ததால் அதனுடனான அரசதந்திர உறவு, வர்த்தக உறவை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டது.