'ஸ்ரீவிஜயா' விமானத்தின் குரல் பதிவுப் பெட்டி கிடைத்தது

'ஸ்ரீவிஜயா' விமானத்தின் குரல் பதிவுப் பெட்டி கிடைத்தது

1 mins read
28a1d95a-47b1-4d83-b5c9-b1861205b7db
-

ஜகார்த்தா: ஜாவா கட­லில் விழுந்து விபத்­துக்­குள்­ளான ஸ்ரீவி­ஜயா விமா­னத்­தின் குரல் பதி­வுப் பெட்டி கிடைத்­து­விட்­டது என்று இந்­தோ­னீ­சிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் நேற்று தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஜன­வரி 6ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்­தில் விமா­னத்­தில் இருந்த 62 பேரும் மாண்­ட­னர்.

விமான விபத்­துக்­கான கார­ணத்தை அறிய இந்­தக் குரல் பதி­வுப் பெட்டி மிக­வும் முக்­கி­யம். விமானி அறை­யில் விமா­னி­க­ளின் உரை­யா­டல்­கள் இதில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கும்.

கடைசி நிமி­டத்­தில் விமா­னத்­திற்கு என்ன பிரச்­சினை ஏற்­பட்­டது என்­பது குறித்து குரல் பதிவு மூலம் தெரிய வர­லாம்.

ஆனால் குரல் பதி­வுப் பெட்டி நல்ல நிலை­யில் இருக்­கி­றதா என்­பது பற்றி தக­வல் இல்லை. சுமார் 26 ஆண்­டு­கள் பழ­மை­யான போயிங் 737-500 ரக விமா­னம் விபத்­துக்­குள்­ளா­ன­தும் சில நாட்­க­ளி­லேயே குரல் பதி­வுப் பெட்­டி­யின் உறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. ஆனால் மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகே குரல் பதி­வுப் பெட்டி கிடைத்­துள்­ளது.

ஆரம்­பக்­கட்ட விசா­ரணை அறிக்­கை­யில் இயந்­தி­ரம் சம­நி­லை­யற்று செயல்­பட்­ட­தால் விமா­னம் சுழன்று பின்­னர் கட­லில் விழுந்­தி­ருக்­க­லாம் என்று விசா­ர­ணை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.