அலுவலகங்களுக்கு அதிகமான ஊழியர்கள் திரும்ப அனுமதி: ரயில்களில் கூட்டத்தில் வித்தியாசம் இல்லை

அலுவலகங்களுக்கு அதிகமான ஊழியர்கள் திரும்ப அனுமதி: ரயில்களில் கூட்டத்தில் வித்தியாசம் இல்லை

1 mins read
675bd85d-9a9a-473a-b1cc-8e68e3954b10
முகக்கவசம் மட்டும் இல்லையெனில் கொவிட்-19 நினைவே வந்து இருக்காது போன்ற சூழல் காணப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு, நேற்று முதல் 75% ஊழியர்கள் அலுவலகம் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். என்றாலும் எம்ஆர்டி ரயில்களில் குறிப்பிடும்படியாக அதிகக் கூட்டம் தென்படவில்லை.

ராஃபிள்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பயணிகள் நெருக்கமாக அருகருகே செல்வதைக் காண முடிந்தது. முகக்கவசம் மட்டும் இல்லையெனில் கொவிட்-19 நினைவே வந்து இருக்காது போன்ற சூழல் காணப்பட்டது.

எந்த வேறுபாடும் தெரியவில்லை என்று அந்த ரயில் நிலையத்திற்கு அருகே வேலை பார்க்கும் பாதுகாவல் ஊழியர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

மத்திய வணிக வட்டாரத்தின் மையமான மரினா பே நிதி மையத்தில் உச்ச நேரத்தில்கூட ரயில்களின் இருக்கைகள் காலியாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்