மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்த முன்னணி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் 100க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கும் ராணுவம் வலை வீசியிருக்கிறது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்த பிறகு நாள்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நசுக்கி வருகிறது. ராணுவம் பல்வேறு சம்பவங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2,500க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற வேண்டிய வயதில் கேட்பாரற்றவர் ேபச்சைக் கேட்டு ராணுவத் தளபதி மின் அவுங் ஹிலைங் சொந்த மக்களையே கொன்று வருகிறார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் சீனா இருப்பதாக மியன்மார் மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
இந்த நிலையில் மியன்மாரிலும் அண்டை நாடான தாய்லாந்திலும் பிரபலமாக விளங்கும் 24 வயது பயிங் தாக்கோனை ராணுவம் கைது செய்துள்ளது.


