பிரேசிலியா: விமான விபத்தில் இறந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட விமானி 38 நாள்களுக்குப் பின் உயிருடன் திரும்பிய சம்பவம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி தான் ஓட்டிச் சென்ற சிறுவிமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட, அதை அமேசான் வனப்பகுதியில் பாதுகாப்பாகத் தரை இறக்கினார்
அன்டோனியோ சேனா, 36. அதிலிருந்து அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் அவ்விமானம் வெடித்துச் சிதறியது.
அடர்ந்த வனப்பகுதிக்குள் சேனா மாட்டிக்கொண்டதால் மீட்புப் படையினர் ஐந்து நாள்களாகத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்பின் வனத்தில் கிடைத்த கனிகளை உண்டபடி மனித நடமாட்டத்தைத் தேடி நடக்கத் தொடங்கினார் சேனா. 35வது நாளில் அவர் கொட்டை உணவு சேகரிப்பாளர்கள் இருந்த ஒரு முகாமை அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சேனாவின் தாயாரைத் தொடர்புகொண்டு அவரின் மகன் உயிருடன் இருப்பதைத் தெரிவித்தனர். இடைப்பட்ட நாள்களில் சேனாவின் உடல் எடை 25 கிலோ குறைந்துவிட்டதாகக் கூறப்பட்டது.