2ஆம் எலிசபெத் ராணியாரின் கணவர் மறைவு

2ஆம் எலிசபெத் ராணியாரின் கணவர் மறைவு

1 mins read
ba53d307-eff7-48e6-ba6c-d439d9a18075
-

லண்டன்: இரண்டாம் எலிசபெத் ராணியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (படம்) நேற்றுக் காலை காலமானார். இவருக்கு வயது 99.

எடின்பர்க் கோமகனான இவர் 1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத்தை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இளவரசி அரசியானார்.

ஒரு மாதச் சிகிச்சைக்குப் பின் கடந்த மாதம்தான் இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையிலிருந்து அரண்மனைக்குத் திரும்பினார்.

இளவரசர் ஃபிலிப்-இரண்டாம் எலிசபெத் ராணி தம்பதியருக்கு நான்கு குழந்தைகளும் எட்டுப் பேரப் பிள்ளைகளும் பத்துக் கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், பெர்க்‌ஷியரில் உள்ள 'வின்சர் கேசில்' அரச குடியிருப்பில் இளவரசர் ஃபிலிப்பின் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.