லண்டன்: எடின்பர்க் கோமகனும் 2ஆம் எலிசபெத் ராணியாரின் கணவருமான இளவரசர் ஃபிலிப்பின் மரணத்தை அனுசரிக்கும் விதமாக, லண்டன், எடின்பர்க், கார்டிஃப், பெல்ஃபாஸ்ட் உட்பட பல பிரிட்டிஷ் நகரங்களில் இருந்தும் ஜிப்ரால்டரில் இருந்தும் போர்க்கப்பல்களில் இருந்தும் பீரங்கி மரியாதை முழக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு சுற்றில் 41 குண்டுகளை பீரங்கிகள் முழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. 73 ஆண்டுகளாக ராணியாரின் கணவராக இருந்த இளவரசர் ஃபிலிப், நேற்று முன்தினம் தமது 99வது வயதில் காலமானார்.
இளவரசர் ஃபிலிப் மறைவு: பிரிட்டன் முழுக்க பீரங்கி மரியாதை முழக்கம்
1 mins read
-

