தெற்கு பிரேசிலில் கட்டப்பட்டு வரும் இயேசு கிறிஸ்து, ரியோ டி ஜெனிரோவிலுள்ள பிரபல 'கிறைஸ்ட் தி ரிடீமர்' சிலையைவிட பெரிதாக உள்ளது. 2019ஆம் ஆண்டிலிருந்து இச்சிலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ரியோ கிரோண்ட டோ சுல் நகரிலுள்ள சிலைக்கு இவ்வாரத்தின் தொடக்கத்தில் தலையும் விரிந்த கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாண்டின் முடிவுக்குள் இந்தச் சிலைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சிலை 43 மீட்டர் நீளத்திலும் 36 மீட்டர் அகலத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

