கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பிலிப்பீன்ஸ்

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பிலிப்பீன்ஸ்

1 mins read
077d671c-f0bc-4835-8645-04efcb6e0b3b
-

மணிலா: பிலிப்­பீன்­சில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­மாக இருக்­கிறது. இதன் கார­ண­மாக அங்­குள்ள மருத்­து­வ­

ம­னை­களில் படுக்கை பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் தலை­ந­கர் மணி­லா­வி­லும் அதன் அரு­கில் உள்ள நான்கு மாநி­லங்­க­ளி­லும் கடந்த இரண்டு வாரங்­க­ளுக்­குக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில், இந்­தக் கட்­டுப்­பா­டு­களை அந்­நாட்டு அர­சாங்­கம் தளர்த்­து­கிறது. இன்­றி­லி­ருந்து இம்­மா­தம் இறுதி வரை கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும். இதற்கு மேம்­

ப­டுத்­தப்­பட்ட சமூ­கத் தனி­மைப்

­ப­டுத்­து­தல் என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக கூடு­த­லாக 3,000 படுக்­கை­கள் சேர்க்­கப்­ப­டு­வ­தாக பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் நேற்று தெரி­வித்­தார். இது மருத்­து­வ­மனை எதிர்­கொள்­ளும் நெருக்­க­டியை சற்று தளர்த்­தும் என்று அவர் கூறி­னார்.

பிலிப்­பீன்­சில் மேலும் 11,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு கோரோனா

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இம்­மா­தம் 9ஆம் தேதி­யி­

லி­ருந்து பிலிப்­பீன்­சில் அன்­றாட கொவிட்-19 பாதிப்பு 11,000க்கும் அதி­க­மா­கப் பதி­வா­கி­யுள்­ளது.

பிலிப்­பீன்­சில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை ஏறத்­தாழ 865,000ஆக பதி­வா­கி­யுள்­ளது.

கிட்­டத்­தட்ட 15,000 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் இந்­தோ­னீ­சி­யாவை அடுத்து, கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் பிலிப்­பீன்ஸ் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.