செயிண்ட் வின்சென்ட் தீவில் எரிமலை வெடிப்பு

செயிண்ட் வின்சென்ட் தீவில் எரிமலை வெடிப்பு

1 mins read
119272c3-08d6-4814-a0e2-1c7b065a3958
-

கெரிபியன் தீவுகளில் ஒன்றான செயிண்ட் வின்சென்ட் தீவில் உள்ள 'லா சொவ்ஃரே' எரிமலை வெடித்ததில் அதிலிருந்து கரும்புகையும் சாம்பலும் வெளியானது.

எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சாம்பல் படர்ந்தது. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எரிமலை வெடித்துள்ளது.

எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவதியுறும் மக்களை செயிண்ட் வின்சென்ட் தீவின் பிரதமர் ரால்ஃப் கொன்சால்வேஸ் நேரில் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார்.

படம்: ராய்ட்டர்ஸ்