சரக்குக் கப்பலில் தீப்பிடித்துக்கொண்ட கொள்கலன்கள்; தொடர்ந்து நான்காவது நாளாக தீயை அணைக்க போராட்டம்

சரக்குக் கப்பலில் தீப்பிடித்துக்கொண்ட கொள்கலன்கள்; தொடர்ந்து நான்காவது நாளாக தீயை அணைக்க போராட்டம்

1 mins read
287a12ad-722d-49d9-9f58-d2f0ce0965c2
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் கிள்­ளான் துறை­மு­கத்­தில் நங்­கூ­ர­மிட்­டுள்ள சரக்­குக் கப்­பல் ஒன்று கடந்த நான்கு நாட்­க­ளாக தீப்­பற்றி எரி­கிறது.

தீயை அணைக்க மலே­சிய தீய­ணைப்­புப் படை­யி­னர் நான்கு நாட்­க­ளா­கப் போராடி வரு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் பதி­வான இன்­ட­ரே­ஷியா கெட­லிஸ்ட் சரக்­குக் கப்­ப­லில் இருக்­கும் கொள்­க­லன்­க­ளி­லி­ருந்து கடந்த புதன்­கி­ழ­மை­யன்று புகை வெளி­யே­றியதை மலே­சிய துறை­முக அதி­கா­ரி­கள் கண்­ட­தும் துறை­மு­கத்­துக்­குத் திரும்­பு­மாறு கப்­பல் மாலு­மிக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

நேற்று காலை 11 மணி நில­வ­ரப்­படி தீப்­பற்றி எரி­யும் 11 கொள்­

க­லன்­களில் ஆறு கொள்­க­லன்­களில் இருந்த தீ அணைக்­கப்­பட்டு­விட்­ட­தாக சிலாங்­கூர்

மாநி­லத்­தின் தீய­ணைப்பு, மீட்­புப் பணித் துறை இயக்­கு­நர்

நூரா­ஸாம் காமிஸ் தெரி­வித்­தார். தீய­ணைப்­புப் பணி­கள் தொடர்­வ­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

"ஒவ்­வொரு வரி­சை­யி­லும் ஐந்து கொள்­க­லன்­கள் ஒன்­றின்­மேல் ஒன்­றாக அடுக்­கப்­பட்­டுள்­ளன. கொள்­க­லன்­க­ளுக்­கி­டையே மிகச் சிறிய இடம் மட்­டுமே உள்­ளது. அதில் தீய­ணைப்­புப் படை­யி­னர் புகுந்து தீய­ணைப்­புப் பணி­களில் ஈடு­ப­டு­வது மிக­வும் சவால்­மிக்­க­தாக உள்­ளது.

"அது­மட்­டு­மல்­லாது, கொள்

­க­லன்­க­ளுக்­குள் என்ன இருக்­கிறது என்று எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. கொள்­க­லன்­க­ளைத் திறப்­ப­தற்கு முன்பு அனு­மதி பெற வேண்­டும்.

"அந்­தக் கப்­ப­லின் சிப்­பந்­தி­கள் பெரும்­பா­லா­னோ­ருக்கு ஆங்­கி­லம் அவ்­வ­ள­வாக தெரி­யா­த­தால் அவர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்­

வ­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது," என்று திரு நூரா­ஸாம் காமிஸ் தெரி­வித்­தார்.

பாதிக்­கப்­பட்ட சரக்­குக் கப்­பல் கிள்­ளான் துறை­மு­கத்­தி­லி­ருந்து இந்­தி­யா­வில் கொச்­சி­னுக்­குச் செல்ல இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.