நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 21 தொழிலாளர்கள்

நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 21 தொழிலாளர்கள்

1 mins read
c34c9799-7377-4d8d-a27c-cef35b305fdd
-

பெய்­ஜிங்: சீனா­வின் சிங்­ஜி­யாங் மாநி­லத்­தில் உள்ள நிலக்­கரிச் சுரங்­கத்­தில் திடீ­ரென்று வெள்­ளம் ஏற்­பட்­டதை அடுத்து, அதில் இருந்த சுரங்­கப் பணி தொழி­லா­ளர்­கள் வெளியே வர­மு­டி­யா­மல் சிக்­கிக்­கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து, மீட்­புப் பணி­யா­ளர்­கள் எட்டு தொழி­லா­ளர்­களை பத்­தி­ர­மாக மீட்­ட­னர். ஆனால் 21 தொழி­லா­ளர்­கள் சுரங்­கத்­தில் இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். சுரங்­கத்­தில் வெள்­ளம் ஏற்­பட்­ட­தால் அப்­ப­கு­தி­யில் மின்­தடை ஏற்­பட்­டது.

சுரங்­கத்­தில் சிக்­கிக்­கொண்ட 21 தொழி­லா­ளர்­களில் 13 பேரின் இருப்­பி­டத்தை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­து­விட்­ட­தாக சீன ஊட­கம் தெரி­வித்­தது.

எஞ்­சிய ஒன்­பது தொழி­லா­ளர்­க­ளின் இருப்­பி­டம் இன்­னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த ஜன­வரி மாதம் சீனா­வின் ஷங்­டோங் மாநி­லத்­தில் உள்ள தங்க சுரங்­கத்­தில் வெடிப்பு நிகழ்ந்­த­தில் பத்து சுரங்­கப் பணி தொழி­லா­ளர்­கள் மாண்­ட­னர்.