இந்தியாவில் நாளுக்கு நாள் கிருமித்தொற்று புதிய உச்சம்

இந்தியாவில் நாளுக்கு நாள் கிருமித்தொற்று புதிய உச்சம்

1 mins read
b0bd90d7-b56e-4775-ade5-180ee08a3416
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்குள் நுழைய பெரும் கூட்டமாகக் காத்திருக்கும் பயணிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 168,912 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 13.53 மில்லியன் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களைப் பொறுத்தவரை பிரேசிலை முந்திவிட்டது இந்தியா.

இந்தியாவில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 904 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவே முதன்முறை.

இந்தியாவில் இதுவரை 104.5 மில்லியன் அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகொவிட்-19கொரோனாகிருமித்தொற்று