மலேசியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி அனுமதி

மலேசியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி அனுமதி

1 mins read
481ff729-8460-4f36-9e43-8505d6e300ff
-

கோலா­லம்­பூர்: தேசி­யத் தடுப்­பூ­சித் திட்­டத்­தின் 2வது, 3வது கட்­டத்­தில் தனி­யார் மருத்­து­வ­ம­னை ­களை­யும் தடுப்­பூசி நிலை­யங்­க­ளா­கப் பயன்­ப­டுத்த மலே­சிய அரசு முடிவு செய்­துள்­ளது. இது பற்­றிய விவ­ரங்­களை வெளி­யிட்ட சுகா­தார அமைச்­சர் ஆதம் பாபா, தடுப்­பூ­சித் திட்­டத்தை பர­வ­லாக்க அர­சாங்­கமே தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு இல­வ­ச­மாக தடுப்­பூ­சி­களை விநி­யோ­கிக்­கும் என்­றார்.

"நாட்­டில் 203 தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் செயல்­ப­டு­கின்­றன. அனைத்து தனி­யார் மருத்­து­வ ­மனை­களும் மக்­க­ளுக்­கா­க­வும் நாட்­டுக்­கா­க­வும் பங்­காற்ற முன் வர வேண்­டும்," என்று அவர் கேட்­டுக் கொண்­டார்.

இதில் பங்­கேற்க விரும்­பும் மருத்­து­வ­ம­னை­கள் இன்று முதல் 'ProtectHealth' இணை­யத் தளம் மூலம் பதிவு செய்­ய­ வேண்டும்.

இது­வரை தடுப்­பூ­சித் திட்­டத்­தில் 2,304 தனி­யார் மருத்­து­வர்­கள் சேர்ந்­துள்­ள­னர் என்று ஆதம் பாபா குறிப்­பிட்­டார்,

தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின் 2வது கட்­டத்­தில் அறு­பது வயதுக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு 'சினோ­வாக்' தடுப்­பூசி போடப்­படும் என்று அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­த­தாக பெர்­னாமா குறிப்­பிட்­டது.

அத்­திட்­டத்­தின் ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு கைரி, 583,903 பேருக்கு குறைந்­தது ஒரு முறை­யா­வது தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது என்­றார்.

அவர்­களில் 395,891 பேருக்கு இரண்டு முறை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. சுமார் 8.51 மில்லியன் பேர் தடுப்பூசிக்குப் பதிவு செய்து உள்ளனர் என்று அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சரு மான கைரி கூறினார். இதற்கிடையே ரமலான் மாதத்தையொட்டி சில கட்டுப்பாடுகளை மலேசிய அரசு தளர்த்தியுள்ளது.