கடைகள் திறப்பு; உற்சாகம்

கடைகள் திறப்பு; உற்சாகம்

2 mins read
4124ea90-be14-4d3b-96a4-d9eb7e738bdf
-

லண்டன்: இங்கிலாந்தில் கடைகள், சிகை அலங்கார நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள் போன்றவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கொவிட்-19 கட்டுப்பாடு களிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று இதனை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருணித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் உருமாறிய கிருமி பரவியதால் 3வது முறையாக நாடு முடக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

ஆனால் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு ஆண்களில் பாதி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டதால் கிருமித் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 95 விழுக்காட்டுக்கு மேல் குறைந்து உள்ளது. ஜனவரி யில் உச்சத்தி லிருந்த கிருமித் தொற்றுச் சம்பவங்களும் 90 விழுக்காட்டுக்கு மேல் குறைந்து உள்ளன. சென்ற ஞாயிற்றுக் கிழமை ஏழு பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இது, செப்டம்பர் 14ஆம் ேததிக்குப் பிறகு பதிவான ஆகக்குறைவான மரணச் சம்பவங் களாகும்.

முடக்கத்தை படிப்படியாக விலக்குவதற்கு நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் ஜான்சன் தெரி வித்தார். விரைவில் மதுபானக் கூடத்தில் ஒரு குவளை பியர் அருந்துவதை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் இம்மாதத் தொடக்கத்தில் திரு ஜான்சன் கூறி இருந்தார்.

"நீண்ட நாட்களாக மூடி வைத்திருந்த வர்த்தக நிறு வனங்களுக்கு நிச்சயம் நிம்மதி யளிக்கும். நமக்குப் பிடித்தவற்றையும் தவறவிட்டதையும் மீண்டும் செய்ய நமக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது," என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆனால் அனைவரும் பொறுப் புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கைகள், முகம், இடைவெளி, தூய்மையான காற்று ஆகியவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் கிருமித் தொற்றுக்கு 127,000 பேர் பலியாகி விட்டனர். நாடு முடக்கப்பட்டதால் வர்த்தக நிறுவனங்களுக்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.