ஆங் சான் சூச்சி மீது
புதிய குற்றச்சாட்டு
யங்கூன்: மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்துள்ள ராணுவம், சிறையில் அடைத்துள்ள ஆங் சான் சூச்சி மீது புதிது புதிதாக குற்றச்சாட்டுகளைக் கண்டுபிடித்து சுமத்தி வருகிறது. இயற்கை பேரிடர் நிர்வாகச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஆங் சான் சூச்சியின் வழக்கறிஞர் மின் மின் சோ தெரிவித்தார். ஆங் சான் சூச்சி மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
பங்ளாதேஷில் 8 நாள் முடக்கம்
டாக்கா: பங்ளாதேஷில் எட்டு நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களை மூடவும் உள்ளூர்ப் போக்குவரத்தை நிறுத்தவும் அந்நாட்டின் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாட்டில் கட்டுக்கடங்காமல் கிருமித்தொற்று பரவுவதால் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுமார் 160 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட பங்ளாதேஷில் 686,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,739 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

