போலிஸ் சுட்டு ஒருவர் மரணம்; வாகனங்கள் நொறுக்கப்பட்டன

போலிஸ் சுட்டு ஒருவர் மரணம்; வாகனங்கள் நொறுக்கப்பட்டன

2 mins read
b422afd8-a487-46f1-b349-d6ddadc65c29
வாகனங்கள் மீது ஏறிக் குதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட சிலர்.படம்: ஏஎஃப்பி -

புருக்­ளின்: மின்­னி­யா­பொ­லி­சில் போலிஸ் சுட்டு ஒரு­வர் மரண மடைந்­த­தால் மக்கள் ஆத்திரத்தில் வாகனங்களை அடித்து நொறுக் கினர்.

அவர்களை கலைக்க போலிசார் பகீரத முயற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த மே மாதத்­தில் கறுப்­பின ஆட­வர் ஜார்ஜ் ஃபுளாய்ட் மர­ண­ம­டைந்த அதே இடத்­தில் இந்தச் சம்பவமும் நடந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

காரிலிருந்த கறுப்பின ஆடவரை காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த சில நுறு பேர் 'ஜார்ஜ் ஃபுளாய்­டுக்கு நீதி வேண்­டும்' உள்­ளிட்ட வாச­கங்­களை ஏந்தி போலி­சா­ருக்கு எதி­ராக முழக்­க­மிட்­ட­னர். வாக­னங்­கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் சிலர் வாக­னங்­கள் மீது ஏறி குதித்­த­னர்.

அவர்­க­ளைக் கலைப்­ப­தற்­காக போலி­சார் ரப்­பர் தோட்­டாக்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்டியிருந்தது. இதில் இரு­வர் காயம் அடைந்­த­னர்.

தலை­யில் ரத்­தம் வழிந்து கொண்டிருந்த ஒருவருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலுதவி களைச் செய்தனர். இரவு நெருங்­கி­ய­தும் மேலும் சில நூறு பேர் புற­ந­கர்ப் பகு­தி­யில் உள்ள போலிஸ் நிலை­யத்தை முற்றுகையிட்டதால் மேலும் பதற்றம் கூடியது. காவல்­நி­லை­யத்­துக்குப் பாது­காப்புப் பலப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மீது போலி­சார் எரிச்­சலை ஏற்­ப­டுத்­தும் ரசா­ய­னத்­தைத் தெளித்­த­னர். அப்­போ­தும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அடங்­க­வில்லை.

போலி­சாரின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானவரின் பெயர் டாண்ட் ரைட் என்று தெரிவிக்கப் பட்டது. அதிகாலை 2.00 மணி அள­வில் போக்­கு­வ­ரத்து விதியை மீறி­ய­தால் அவரை காரிலிருந்து வெளி­யேற்றி போலி­சார் சோத­னை­யிட்­ட­னர். அவர் மீது ஏற்­கெ­னவே கைது ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்தது.

அவரை கைது செய்ய முயற்சி செய்­த­போது அவர் காரில் ஏறி தப்ப முயற்சி செய்ததாகவும் அப்போது அதி­கா­ரி­களில் ஒரு­வர் அவரை சுட்­டதாகவும் போலிசார் கூறினர்.

இதற்கு முன்பு நடந்த சம்­ப­வத்­தில் ஃபுளாயிட்­டின் கழுத்து மீது ஒன்­பது நிமி­டங்­க­ளுக்கு மேல் காலை வைத்து அழுத்­திப் பிடித்­த­தால் அவர் மர­ண­ம­டைந்­தார்.

இது தொடர்­பான வழக்கு விசா­ரணை கடந்த மூன்று வார­மாக நடை­பெற்று வரு­வ­தால் மின்­னி­யா­பொலி­சில் தொடர்ந்து பதற்­றம் நில­வு­கிறது.