தாய்லாந்தில் 985 பேர் பாதிப்பு

தாய்லாந்தில் 985 பேர் பாதிப்பு

1 mins read
3d961f93-d4fe-4aad-894b-5d756b51368c
-

பேங்காக்: தாய்லாந்தில் தொடர்ந்து 2வது நாளாக கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மூன்றாவது அலையில் நாடு சிக்கியுள்ள வேளையில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு போராடி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் 985 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நிலவரத்தில் குடியேறிகளும் சுற்றுலாப் பயணிகளும் நீண்ட நாட்கள் நாட்டில் தங்க குடி நுழைவு விதிமுறைகளில் மாற்றம் செய்ய தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.