‘ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் செல்ல தடுப்பூசி கட்டாயமல்ல’

ஹாங்­காங்: சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யி­லான சிறப்பு இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு திட்­டம் தள்­ளிப்­போ­னதை அடுத்து மீண்­டும் அதன் தொடர்­பில் பேச்­சு­வார்த்தை நடந்­து­வ­ரு­கிறது. இதற்­கி­டையே, ஹாங்­காங்­கி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள், தங்­க­ளின் பய­ணத்­திற்கு முன்பு தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­த­னையை சிங்­கப்­பூர் விதிக்­காது என்­றார் ஹாங்­காங் தலைமை நிர்­வாகி கேரி லாம்.

இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ருக்­குச் செல்­ல­வி­ருக்­கும் ஹாங்­காங்­வா­சி­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது கட்­டா­ய­மாக்­கப்­படும் என்­றார் அவர்.

இத்­த­கைய பயண ஏற்­பாட்­டின் கீழ் செல்­வோர், தடுப்­பூ­சி­யின் இரு 'டோஸ்' அள­வையும் போட்டு முடித்­தி­ருப்­ப­து­டன் இரண்­டா­வது 'டோஸ்' முடிந்து 14 நாட்­களுக்குப் பின்­னரே விமா­னப் பய­ணங்­களில் செல்ல அனு­ம­திக்கப்­ப­டு­வர் என்று மார்ச் 29ஆம் தேதி­யன்று வர்த்­தக, பொரு­ளி­யல் மேம்­பாட்­டுத் துறை செய­லா­ளர் எட்­வர்ட் யாவ் கூறி­ இருந்­தார்.

அதே கருத்தை திரு­வாட்டி லாம் நேற்று மீண்­டும் வலி­யு­றுத்­தி­னார்.

ஹாங்­காங்­வா­சி­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விக்­க­ சலு­கை­கள் வழங்க விரும்­பு­வ­தாகவும் அவர் தெரி­வித்­தார்.

இத்­திட்­டம் கைகூ­டும் காலம் குறித்­துக் கேட்­கப்­பட்­ட­போது, இரு தரப்­பி­லி­ருந்­தும் கூடிய விரை­வில் ஒப்­பு­தல் வரு­வ­தைத் தாம் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார்.

ஒப்­பந்­தப்­படி ஹாங்­காங்­கி­லிருந்து சிங்­கப்­பூ­ருக்கு நேரடி விமா­னச் சேவை மூலம் வரு­ப­வர்­கள் பய­ணத்­துக்கு முன்பு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு உட்­பட்டு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்­யப்­பட வேண்­டும்.

குறைந்த, மித­மான கொரோனா தொற்று பாதிப்பு உள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்­கான பயண ஏற்­பா­டு­கள் இவ்­வாண்­டின் பிற்­பாதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டும் என்று Money FM 89.3 வானொ­லிக்கு அளித்த பேட்­டி­யில் சிங்கப்பூர் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யி­ருந்­தார்.

தனி­மைப்­ப­டுத்­தும் விதி­முறை, இல்­லத் தனிமை உத்­த­ரவு ஆகி­ய­வற்றை நீக்­கு­வது, முடங்­கிக்

கிடக்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சேவையை மீண்­டும் உயிர்ப்­பிக்க முக்­கி­ய­மா­னவை என்­றார் அவர்.

ஹாங்­காங்­கில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலை­யில், பயண ஏற்­பாடு திட்­டம் குறித்து மீண்­டும் பேச்­சு­வார்த்தை தொடங்­கி­யது.

கடந்த வாரம் ஒரு நாளில் சரா­சரி­யாக இரண்டு அல்­லது மூன்று சமூ­கத் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன. நேற்று பதி­வான 13 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் சமூக அள­வில் தொற்­றி­யவை மூன்று.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!