ஒரு நாள் பதிவான கொவிட்-19 சம்பவங்களில் அமெரிக்காவை மிஞ்சிவிட்டது கனடா

ஒரு நாள் பதிவான கொவிட்-19 சம்பவங்களில் அமெரிக்காவை மிஞ்சிவிட்டது கனடா

1 mins read
824f25ef-9625-4b8f-a2a0-91fa82165a69
-

ஒட்­டாவா: கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­யதை அடுத்து வருத்­தம் அளிக்­கும் ஒரு மைல்­கல்லை கனடா அடைந்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வை­விட அதி­க­மான ஒரு நாள் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கன­டா­வில் பதி­வா­கி­உள்­ளன.

கடந்த ஏழு நாட்­க­ளாக கன­டா­வின் ஒவ்­வொரு 100,000 பேரில் சுமார் 22 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு வரு­கிறது. குறிப்­பாக, கன­டா­வின் ஆகப் பெரிய நக­ரான டொரொன்டோ, அதிக நெருக்­கு­தலுக்கு ஆளா­கி­யுள்­ளது.

"இது­வரை இருந்து வரும் கொள்­ளை­நோ­யின் ஆக மோச­மான கட்­டம் இது­தான்," என்­றார் அந்­நாட்டு பல்­க­லைக்­க­ழக சுகா­தார கட்­ட­மைப்­பின் தலைமை நிர்­வாக அதி­காரி கெவின் ஸ்மித்.

அவ­சர அறுவை சிகிச்­சை­க­ளைத் தவிர மற்ற அனைத்து சிகிச்­சை­க­ளை­யும் நிறுத்தி வைக்­கு­மாறு ஒன்­டா­ரியோ உத்­த­ர­விட்­டுள்­ளது.

புற்­று­நோய், இதய மற்­றும் மூளை அறுவை சிகிச்­சைக்­காக காத்­தி­ருக்­கும் நோயா­ளி­கள், தீவிர சிகிச்­சைப் பிரி­வில் கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் தங்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. சிறு­வர்­க­ளுக்­கான டொரொன்டோ மருத்­து­வ­ம­னை­யில் பெரி­ய­வர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கும் நிலை­யும் வந்­து­விட்­டது.

டொரொன்டோ­வில் நேற்று முன்­தி­னம் 1,296 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இந்­நிலை தொடர்ந்­தால் மாத இறு­திக்­குள் நாள் ஒன்­றுக்கு 2,500 சம்பவங்கள் பதிவாகலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.