'சந்தைகளில் உயிருள்ள வனவிலங்குகள் வேண்டாம்'

'சந்தைகளில் உயிருள்ள வனவிலங்குகள் வேண்டாம்'

1 mins read
fd3354e0-de39-4822-bc50-7efa532812fc
-

ஜெனிவா: மேலும் புதிய நோய்கள் உருவாவதைத் தடுக்க, உணவுச் சந்தைகளில் உயிருடன் உள்ள வனவிலங்குகளை விற்க வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உணவும் வாழ்வாதாரமும் அளிப்பதில் சந்தைகள் முக்கிய பங்கு வகித்தாலும் பாலூட்டி விலங்குகள் உயிருடன் விற்கப்படுவதைத் தடை செய்வதால் சந்தை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சுகாதாரம் காக்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டது. மனிதர்களிடையே ஏற்படும் தொற்றுநோய்களில் 70 விழுக்காட்டுக்கு மேல் மிருகங்கள், குறிப்பாக வனவிலங்குகளே காரணம் என்று கூறப்பட்டது.