செப்.11க்குள் மீட்கத் திட்டம்

செப்.11க்குள் மீட்கத் திட்டம்

1 mins read
16d7f540-7f42-4580-b2ca-7d84dd46652e
-

ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் 2,500 அமெரிக்கத் துருப்புகள்

வாஷிங்­டன்: ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள அமெ­ரிக்­கப் படை­களை இவ்­வாண்டு செப்­டம்­பர் 11ஆம் தேதிக்­குள் முழு­மை­யாக மீட்க அதி­பர் ஜோ பைடன் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

படை மீட்பு தொடர்­பாக முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்ப் தலி­பான்­க­ளு­டன் ஒப்­பந்­தம் ஒன்றை ஏற்­ப­டுத்தி இருந்­தார்.

வரும் மே 1ஆம் தேதிக்­குள் முழு­மை­யான படை மீட்­புக்கு அவர் உறுதி அளித்­தி­ருந்­தார். ஆனால் அந்த இலக்கை அமெ­ரிக்கா தவற விடும் சூழல் இப்­போது ஏற்­பட்டுள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னில் நிலை கொண்­டி­ருக்­கும் 2,500 அமெ­ரிக்­கத் துருப்­பு­களை இன்­னும் இரு­வா­ரத்­திற்­குள் திரும்­பப் பெற சாத்­தி­ய­மில்லை என்று செவ்­வாய்க்­

கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் சிலர் கூறி­னர்.

அமெ­ரிக்­கா­வில் செப்­டம்­பர் 11 தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தன் இரு­ப­தா­வது ஆண்டு நிறைவு இவ்­வாண்­டில் வரு­கிறது.

அதற்­குள் படை­களை ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து முழு­மை­யா­கத் திரும்­பப் பெற அதி­பர் ஜோ பைடன் திட்­ட­மி­டு­வ­தாக அவர்­கள் கூறி­னர்.

இந்தத் தேதியில் பின்னர் மாற்றம் எதுவும் செய்யப்படுவதற் கான சாத்தியமில்லை என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெ­ரிக்­கப் படை­கள் முழு­மை­யாக மீட்­கப்­பட்­டால் உள்­நாட்டு வன்­செ­யல்­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

வன்­செ­யல்­க­ளைக் குறைப்­ப­தாக தலி­பான் அமைப்பு அளித்த வாக்­கு­றுதி தற்­போது கடைப்­பி­டிக்­கப்­

ப­டு­வ­தில்லை என நேட்­டோ­வும் வட­அட்­லாண்­டிக் அமைப்­பும் கூறி வரு­கின்­றன.