கறுப்பின இளையர் மரணம்: இரு போலிஸ் அதிகாரிகள் விலகல்

கறுப்பின இளையர் மரணம்: இரு போலிஸ் அதிகாரிகள் விலகல்

2 mins read
685a023d-8092-4dd0-959d-2d7a27debdd8
20 வயது இளை யர் சுடப்பட்டதை கண்டித்துமினசோட்டா மாநிலம் புரூக்ளின் சென்டர் போலிஸ் நிலையம் அருகே செவ்வாய்க் கிழமை இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டம். படம்: ஏஎஃப்பி -

மினி­யா­பொ­லிஸ்: அமெ­ரிக்­கா­வில் கறுப்­பின இளை­யர் சுடப்­பட்டு மாண்ட சம்­ப­வத்­தைத் தொடர்ந்து புரூக்­ளின் சென்­டர் போலிஸ் தலைமை அதி­கா­ரி­யும் துப்­பாக்­கி­யால் சுட்ட பெண் போலிஸ் அதி­கா­ரி­யும் தங்­க­ளது பத­வி­யி­லி­ருந்து விலகி உள்­ள­னர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை சாலை­யில் வாக­னச் சோதனை நடை­பெற்­றுக்­கொண்டு இருந்­த­போது டான்ட் ரைட், 20, என்­னும் இளை­யரை அதி­கா­ரி­கள் இடை­ம­றித்­த­னர். அவ­ரது வாக­னப் பதிவு காலா­வ­தி­யா­கி­விட்­ட­தைத் தொடர்ந்து காரை­விட்டு வெளி­யேற்­றப்­பட்ட அவரை கைவி­லங்­கிட அதி­கா­ரி­கள் முயன்­ற­னர். அப்­போது அத­னைத் தடுத்து காரில் ஏற முயன்­ற­ இளையர் நெஞ்­சில் சுடப்­பட்­டார். பின்­னர் அவர் மாண்­டார். இச்­சம்­ப­வம் கறுப்­பின மக்­கள் உள்­ளிட்ட பலரை சினம் கொள்­ளச் செய்­தது. அத­னைத் தொடர்ந்து இரு நாட்­க­ளாக மின­சோட்­டா­வின் ஆகப் பெரிய நக­ரான புளூக்­ளின் சென்­ட­ரில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன. இளை­ய­ரைச் சுட்ட அதி­காரி 26 வயது பெண் போலிஸ் அதி­கா­ரி­யான கிம் போட்­டர் என்று அடை­யா­ளம் காணப்­பட்­டார். இதற்­கி­டையே, சம்­ப­வத்தை விசா­ரித்த தலைமை போலிஸ் அதி­காரி டிம் கானன், சம்­ப­வம் ஒரு விபத்து என்­றும் மின்­ன­திர்ச்சி 'டேசர்' துப்­பாக்­கியை பணிக்கு எடுத்­துச் செல்­வ­தற்­குப் பதி­லாக தவ­று­த­லாக உண்­மை­யான கைத்­துப்­பாக்­கியை அதி­காரி எடுத்­துச்சென்­று­ பயன்படுத்தியதா­க­வும் கூறி­னார்.

இத­னைத் தொடர்ந்து இந்த இரு அதி­கா­ரி­க­ளை­யும் வேலை­யி­லி­ருந்து நீக்க நகர மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக புரூக்­ளின் சென்­டர் மேயர் மைக் எலி­யட் கூறி­னார்.

அத­னைத்தொடர்ந்து போலிஸ் தலைமை அதி­காரி டிம் கேன­னும் துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய கிம் போட்­ட­ரும் செவ்­வாய்க்­

கி­ழமை வேலை வில­கல் கடி­தத்­தைக் கொடுத்­த­னர்.