வாஷிங்டன்: தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் சீனாவின் முயற்சி அமெரிக்காவுக்கு எதிரான ஆகப்பெரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என வருடாந்திர அமெரிக்கப் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மாஸ்கோவும்
பெய்ஜிங்கும் ஏற்படுத்தி வரும் விரிவான பாதுகாப்பு சவால்கள் குறித்த எச்சரிக்கையையும்
அது விடுத்துள்ளது. இருப்பினும் சீனாவையோ ரஷ்யாவையோ எதிர்த்து ராணுவ மோதல் நடை பெறுவது போன்ற எதையும் அது குறிப்பிடவில்லை.

