இஸ்கந்தர் புத்ரி: மலேசியாவின் தஞ்சோங் பெலபாஸ் துறைமுகத்தில் 28.35 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 250,000 ரிங்கிட் மதிப்புள்ள இந்த வெங்காயம் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆவணங்களில் வெங்காயம் என்பதற்குப் பதில் வேறு பொருள் குறிப்பிடப்பட்டு இருந்ததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் வழக்கமாக நடத்தப்பட்ட சோதனை யின்போது இவை சிக்கியதாக அவர்கள் கூறினர். இறக்குமதி ஆவணங்களில் முரண்பட்ட தகவல்களைத் தெரிவிப்போருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, 50,000 ரிங்கிட் அபராதம் போன்றவை விதிக்கப்படலாம்.
28 டன் வெங்காயம் பறிமுதல்
1 mins read
-

