மலேசியாவின் சில பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு

மலேசியாவின் சில பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு

2 mins read
ceda62a2-f977-4509-be82-77660b11dfc5
-

மலே­சி­யா­வில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 2,000ஐ தாண்­டி­யுள்­ளது. ரம­லான் நோன்பு அனு­ச­ரிக்­கப்­படும் இந்­தக் கால­கட்­டத்­தில் கடந்த ஆறு வாரங்­களில் இல்­லாத அள­வாக இன்று 2,148 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­உள்­ளன.

கடந்த ஒரு வார கால­மாக மலே­சி­யா­வில் கொரோனா தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி 941 பேருக்கு தொற்று பதி­வா­கி­யி­ருந்­தது. கடந்த ஜன­வரி மாதம் 30ஆம் தேதி ஆக அதி­க­மாக 5,278 பேருக்கு தொற்று பதி­வா­கி­யி­ருந்­தது.

சென்ற ஆண்டு ரம­லான் உண­வுச் சந்­தை­கள் தடை செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், இம்­மா­தம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து ரம­லான் நோன்பு தொடங்­கி­ய­தால் அந்­தச் சந்­தை­க­ளுக்கு அர­சாங்­கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. உண­வுக் கடை­கள் காலை 6 மணி வரை திறந்­தி­ருக்­க­லாம்.

சந்­தை­கள் செயல்­பட அனு­மதி அளித்­தது உட்­பட தளர்த்­தப்­பட்ட கொவிட்-19 விதி­மு­றை­களை மறு ஆய்வு செய்­யு­மாறு தேசிய பாது­காப்பு மன்­றத்­தி­டம் தடுப்­பூசி போடு­வ­தற்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரான கைரி ஜமா­லு­தீன் நேற்று கேட்­டுக்­கொண்­டார்.

ரம­லான் சந்­தை­க­ளுக்­குச் செல்­வோர் கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடந்துகொள்ள வேண்­டும் என முன்பு குறிப்­பிட்­டி­ருந்த பிர­த­மர் முகை­தீன் யாசின், நாடு­த­ழுவிய அள­வில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை மூன்­றா­வது முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த விரும்­ப­வில்லை என்­றார்.

கடந்த ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­களில் மலே­சி­யா­வின் பெரும்­பா­லான பகு­தி­களில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­தா­லும் மார்ச் மாத­வாக்­கில் அவை தளர்த்­தப்­பட்­டன.

இருப்­பி­னும் ஜன­வரி முதல் மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணத்­துக்கு அனு­மதி இல்லை.

அடுத்த மாத மத்­தி­வாக்­கில் கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டங்­க­ளின்­போ­தும் மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான தடை தொடர பரிந்­து­ரைத்­தி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்­சர் ஆதம் பாபா தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தை­யொட்டி, கோத்தா பாரு உட்­பட கிளந்­தா­னின் 10 மாவட்­டங்­க­ளி­லும் சர­வாக்­கின் 5 மாவட்­டங்­

க­ளி­லும் நாளை முதல் இரண்டு வாரங்­க­ளுக்கு நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை விதிக்­கப்­பட்­டுள்­ளது.