ஈப்போ: ஒற்றைப் பெற்றோரான கிருஷ்ணா, 31, இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த ஆடவர் அவரைத் தாக்கியதில் கிருஷ்ணா உயிரிழந்தார். கிருஷ்ணா தாக்கப்பட்டபோது, 6 மற்றும் 8 வயதுகளில் இருந்த அவரது பிள்ளைகள் அக்கம்பக்கத்தில் இருப்போரை உதவிக்கு அழைக்க சென்றதாகக் கூறப்படுகிறது. போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது அங்கு கிருஷ்ணாவும் ஓர் ஆடவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். கிருஷ்ணா உயிரிழந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது. அந்த ஆடவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலிசார் தெரிவித்தனர். தற்போது பணியில் இல்லாத அந்த 23 வயது இளையர் கிருஷ்ணாவின் ஆண் நண்பர் என்று கூறப்பட்டது. குற்றவியல் சட்டம் 302ன்கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
பிள்ளைகளின் கண் முன்னே தாக்கப்பட்ட தாய் மரணம்
1 mins read
-

