எல்லையை மீண்டும் திறக்க ஆஸ்திரேலியா பரிசீலனை

எல்லையை மீண்டும் திறக்க ஆஸ்திரேலியா பரிசீலனை

2 mins read
7806b6ce-773f-4d28-8206-f80dd1252cb0
ஆஸ்திரேலியப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன். படம்: ஏஎஃப்பி -

சிட்னி: கொரோனா தொற்­றுக்கு எதி­ராக இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களை வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திப்­ப­தன் மூலம் தனது அனைத்­து­லக நாடு­க­ளுக்­கான எல்­லையை ஆஸ்­தி­ரே­லியா மீண்­டும் திறப்­பது குறித்து பரி­சீ­லித்து வரு­வ­தாக அந்­நாட்­டின் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­தார்.

கொரோனா தொற்­றுப் பர­வல் கட்­டுப்­பாட்­டின் கார­ண­மாக ஆஸ்­தி­ரே­லிய குடி­மக்­களும் நிரந்­த­வா­சி­களும் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­வ­தற்கு இப்­போது தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், முக்­கிய கார­ணங்­க­ளுக்­காக அவர்­கள் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். அதே­போல் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று நாடு திரும்­பும் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தங்­கள் சொந்தச் செல­வில் இரண்டு வாரங்­க­ளுக்கு விடு­தி­களில் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

இந்­நி­லை­யில் ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், "தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஆஸ்­தி­ரே­லி­யர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும்.

"குறிப்­பாக முக்­கி­ய­மான நோக்­கங்­க­ளுக்­காக வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­ல­மு­டி­யா­மல் முடங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இது பய­ன­ளிக்­கும்," என்று பெர்த் நக­ரில் நடந்த ஒரு சமூ­கக் கருத்­த­ரங்­கில் தெரி­வித்­தார்.

இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டால், தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் வெளி­நா­டு­க­ளுக்கு வர்த்­த­கம் மற்­றும் தனிப்­பட்ட அவ­ச­ரப் பய­ணங்­களை மேற்­கொள்ள முடி­யும். அவ்­வாறு வெளி­நாடு சென்­ற­வர்­கள் நாடு திரும்­பி­யதும் தங்­க­ளைத் தங்­கள் வீடு­களில் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்று அவர் கூறி­னார்.

"பகுதி பகு­தி­யாக எல்­லை­க­ளைத் திறப்­ப­தற்கு சற்­றுக் காலம் பிடிக்­க­லாம். ஆஸ்­தி­ரே­லி­யா­வில் எளி­தில் தொற்­றுக்கு ஆளா­கக் கூடி­ய­வர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னரே இது சாத்­தி­ய­மா­கும்.

"ஏனெ­னில் வெளி­நாடு சென்று திரும்­பு­ப­வர்­க­ளால் தொற்று பர­வும் அபா­யம் உள்­ளது.

"நாள்­தோ­றும் புதி­தாக தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தது 1,000ஐ எட்­டக்­கூ­டும். தற்­போது சமூக அள­வில் பாதிப்பு இல்லை," என்று அவர் கூறி­னார்.

ஆஸ்­தி­ரே­லியா, தனது எல்­லை­யைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடி­யது.

அதன் கார­ண­மாக அங்கு தொற்று எண்­ணிக்கை அதி­க­ரிக்­க­வில்லை. இது­வ­ரை­யில் அங்கு 29,400 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். 910 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.