பேங்காங்: தாய்லாந்தில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாடு கட்டுப்பாட்டை மேலும் இறுக்குகிறது. உணவகங்களில் மதுவிற்பனைக்குத் தடைவிதிக்கப்படுவதோடு இரண்டு வாரங்களுக்கு கேளிக்கைப் பூங்காக்களையும் பள்ளிகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு தன் எல்லையைத் திறந்துவிட தாய்லாந்து கொண்டுள்ள திட்டத்தை கொரோனா தொற்று முடக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தால் அந்நாடு இப்போது கட்டுப்பாட்டை மேலும் இறுக்குவதாகத் தெரிகிறது.
இதன்மூலம் பேங்காக் உள்ளிட்ட தொற்று அதிகரித்து வரும் நகரங்களில் கராவோக்கே, மதுக்கூடங்கள், உடற்பிடிப்பு நிலையங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு நாடு தழுவிய நிலையில் விரிவுபடுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

