இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக இன்று (ஏப்ரல் 17) காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 234,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கிருமித்தொற்றால் ஒரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் 1,300ஐ கடந்துவிட்டது. கடந்த ஆண்டு அங்கு கிருமிப் பரவல் தொடங்கியது முதல் ஒரே நாளில் இத்தனைப் பேர் உயிரிழந்து இருப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி மரண எண்ணிக்கை ஆக அதிகமாக பதிவாகி இருந்தது. அன்று 1,275 மரணங்கள் பதிவாகியிருந்தன.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கிருமித்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

