ஜனநாயக ஆர்வலர்களுக்குச் சிறை; பல நாடுகள் கண்டனம்

ஜனநாயக ஆர்வலர்களுக்குச் சிறை; பல நாடுகள் கண்டனம்

1 mins read
b0e5c874-46e9-4a98-88cf-8667d2467e8a
-

வாஷிங்­டன்: ஹாங்­காங் ஜன­நா­யக ஆர்­வ­லர்­கள் பல­ருக்கு நேற்று முன் தினம் விதிக்­கப்­பட்ட சிறைத் தண்­ட­னைக்கு அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஆகி­யவை கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

ஹாங்­காங்­கின் முக்­கிய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளில் ஒரு­வ­ரான ஜிம்மி லாய் மற்­றும் 4 முக்­கிய ஜன­நா­யக ஆர்­வ­லர்­க­ளுக்கு 14 மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அந்­நாட்­டில் 'ஜன­நா­ய­கத்­தின் தந்தை' என அறி­யப்­படும் மார்ட்­டின் லீயின் தண்­டனை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஹாங்­காங் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்குச் சிறப்பு குடி­நு­ழை­வுத் திட்­டம் பற்றி கன­டி­யப் பிர­த­மர் ஜஸ்­டின் டுரூடோ அறி­வித்த மூன்று வாரங்­க­ளுக்­குள் 500க்கு மேற்­பட்ட விண்­ணப்­பங்­கள் பெறப்­பட்­டுள்­ள­தாக கன­டா­வின் குடி­நு­ழைவு அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார். வேலை அனு­மதி கோரி 503 விண்­ணப்­பங்­களும் வேலை அனு­ம­தியை நீட்­டிக்­கக்­கோரி 10 விண்­ணப்­பங்­களும் பெறப்­பட்­டன.