கோத்தா கினபாலு: மார்ட்டின் ஃப்ரெடோலின் டுனோங் எனும் 46 வயது ஆடவர் பினாம்பாங்கில் உள்ள வீட்டில் தமது வளர்ப்பு நாயை இறைச்சிக்காக கொன்றதற்காக அவருக்கு விலங்கு நலச் சட்டம் 2015ன் 8வது பிரிவின்கீழ் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால், நான்கு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அந்த ஆடவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி நாயை வேறு இருவரின் உதவியுடன் கட்டையால் அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இத்தகைய குற்றங்களுக்கு 100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

