அமெரிக்க-சீன விவகாரங்கள்: சமநிலை காண ஜப்பான் முயற்சி

அமெரிக்க-சீன விவகாரங்கள்: சமநிலை காண ஜப்பான் முயற்சி

1 mins read
947f2006-4cb4-471d-89ff-71d25de0f68b
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­ப­ரும் ஜப்­பான் பிர­த­ம­ரும் தைவான் நீரி­ணைப் பகு­தி­யில் அமை­தி­யும் நிலைத்­தன்­மை­யும் நிலை­நி­றுத்­த­பப்ட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

அமெ­ரிக்க அதி­ப­ரா­கத் திரு பைடன் பத­வி­யேற்ற பிறகு முதல் முறை­யாக ஜப்­பா­னிய பிர­த­மர் யோஷி­ஹிடே அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்­றார். இரு நாட்­டுத் தலை­வர்­களும் சந்­தித்­துப் பேசிய பிறகு , 'புதிய யுகத்­துக்­கான அமெ­ரிக்க - ஜப்­பான் அனைத்­து­லக பங்­கா­ளித்­து­வம்' எனும் தலைப்­பி­லான அறிக்­கை­யில் இந்­தத் தக­வல் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தின் முக்­கி­யத்­து­வம் குறித்து அந்­தச் சந்­திப்­பின்­போது பேசப்­பட்­டது.

கிழக்கு சீனக் கடல், தெற்கு சீனக் கடல், வட­கொ­ரியா போன்­ற­வற்­றின் தொடர்­பில் சீனா விடுக்­கும் சவால்­களை இணைந்து எதிர்­கொள்­ள­வும் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் சுதந்­தி­ர­மான நட­மாட்­டத்­தை­யும் உறு­திப்­ப­டுத்­த­வும் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தாக இரு நாட்­டுத் தலை­வர்­களும் தெரி­வித்­த­னர். இந்த விவ­கா­ரங்­க­ளின் தொடர்­பில் அமெ­ரிக்கா ஒரு பாதை­யில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது, ஜப்­பான், அந்­தப் பய­ணத்­தைத் திசைமாற்றி விட்டிருப்பதால் ஜப்­பா­னுக்கு சீனா நன்றி தெரி­விக்க வேண்­டும் என இந்தோ-பசி­பிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான ஆய்­வுக் கழ­கத்­தின் தலை­வர் டாக்­டர் டோஷ் மினோ­ஹரா தெரி­வித்­தார்.

ஜப்­பான் நிர்­வ­கிக்­கும் பகு­தி­யில் சீனா­வின் சுற்றுக்காவல் கப்­பல் கடந்த 2 மாதங்­க­ளாக இருப்­பது ஜப்­பா­னுக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­கக் கூற­ப்படுகிறது.