டாக்கா: ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய பங்ளா
தேஷின் தென்கிழக்குப் பகுதி
யிலுள்ள அனல்மின் நிலைய ஊழியர்கள்மீது போலிசார் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது நால்வர் பலியாகினர், பலர் காயமடைந்தனர் என போலிஸ் தெரிவித்தது. காயம் அடைந்தவர்களில் அறுவர் போலிசார். அந்த மின் நிலையக் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள் போலிசார் மீது தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாக போலிஸ் அதிகாரி அஸிஸுல் இஸ்லாம் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சீனாவின் SEPCOIII எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், அந்த மின் நிலையத்தைக் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டநிலையில், அதைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர்கள் நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த வட்டாரவாசிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டதால் கலவரத் தடுப்பு போலிசார் அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

