கணவருக்கு தனியே பிரியாவிடை கொடுக்கும் அரசியார்

கணவருக்கு தனியே பிரியாவிடை கொடுக்கும் அரசியார்

1 mins read
effdc92e-493d-4468-8cfd-6ad1e2c74cdd
-

பிரிட்டிஷ் அரசியார் இரண்டாம் எலிசபெத்தும் அவரது குடும்பத்தினரும், அவரது கணவரான எடின்பர்க் கோமானான பிலிப் மவுண்ட்பேட்டனுக்கு தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

73 ஆண்டுகளாக நீடித்த இவர்களது திருமண பந்தத்தை நிறைவு செய்யும் விதமாக இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு, மிகப் பழமையான செயின்ட் ஜார்ஜ்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. கொவிட்-19 விதிமுறைகளுக்கு இணங்க 30 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

99 வயதில் காலமான இளவரசர் பிலிப், தமக்கு என்றும் பக்கபலமாக இருந்ததை எலிசபெத் அரசியர் 1997ஆம் ஆண்டின்போது தமது உரை ஒன்றில் குறிப்பிட்டார்.