ஷங்காய்: பருவநிலை மாற்றம் பற்றி இந்த ஆண்டு முடிவில் அனைத்துலக அளவில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன.
அதற்கு முன்னதாக பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான கடப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்று சீனாவும் அமெரிக்காவும் இணங்கி உள்ளன.
அந்த இரண்டு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை இதனை தெரிவித்து இருக்கிறது. ஷங்காயில் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் இரு நாடுகளையும் சேர்ந்த பருவநிலைத் துறை பிரமுகர்கள் கூட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக சீனாவின் சுற்றுச்சூழல் அமைச்சு நேற்று அறிவித்தது.
"பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்குத் தீர்வுகாண சீனாவும் அமெரிக்காவும் ஒன்று மற்றொன்றுடன் ஒத்துழைக்க இணங்கி இருக்கின்றன.
"மற்ற நாடுகளுடன் சேர்ந்து செயல்படவும் அவை கடப்பாடு கொண்டுள்ளன," என்று கூட்ட றிக்கை தெரிவித்தது.
பாரிஸ் உடன்பாட்டை நிறைவேற்றும் வகையில் கரிமக் கழிவுகளை 2020களில் குறைப்பதற்குத் தேவைப்படக்கூடிய உருப்படியான செயல்களைப் பற்றி தொடர்ந்து இரு நாடுகளும் விவாதிக்கும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பிரதிநிதி ஜான் கெர்ரி, புதன்கிழமை இரவு, கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இடையே ஷங்காய் நகர் சென்றார்.
அவர் பொதுமக்களுக்கு அனுமதியில்லாத ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். தொடர்ந்து அவர் தென் கொரியாவின் சோல் நகருக்குப் பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பு எடுத்துக்கொண்டதற்குப் பிறகு அமெரிக்க பிரதிநிதி ஒருவர், ஷங்காய் நகருக்கு மேற்கொண்ட முதல் உயர்நிலை வருகையாக அது அமைந்தது. அலாஸ்காவில் மார்ச் மாதம் இந்த இருதரப்பு அதிகாரிகளும் சந்தித்தனர்.
அதைத் தொடர்ந்து இப்போதைய சந்திப்பு இடம்பெற்றது.
உலகிலேயே கரிமக் கழிவுகளை அதிகமாக வெளியிட்டுவரும் இரண்டு மிகப் பெரும் நாடுகளான சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பருவநிலை மாற்றம் பற்றிய பேச்சு மீண்டும் தொடங்கி இருப்பதைக் காட்டுவதாகவும் ஷங்காய் சந்திப்பு அமைந்தது.
அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த டோனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது இந்த இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட விவாதிப்புகள் முடங்கிப்போய் கிடந்தன.
பாரிஸ் உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக 2015ல் டிரம்ப் அறிவித்தார். ஆனால் பைடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் நிலை மாறி இருக்கிறது.
விரைவில் அமெரிக்கா கரிமக் கழிவுகளைக் குறைத்துக்கொள்வதற்கான புதிய உறுதிமொழிகளைப் பிரகடனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குப் பதிலாக சீனாவும் ஆக்ககரமான பதில் நடவடிக்கையை எடுக்கும் என்றும் அதன்மூலம் ஷங்காய் பேச்சுவார்த்தைக்கு சீனா ஊக்கமூட்டும் என்றும் கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்புக்கான சீனாவின் மூத்த ஆலோசகர் லி ஷோ கூறி இருக்கிறார்.
சுற்றுச்சூழலைக் காக்க வலுவான கடப்பாடுகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்து

