சீனாவின் குழந்தைப் பிறப்புகள் 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் குறையலாம்

சீனாவின் குழந்தைப் பிறப்புகள் 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் குறையலாம்

1 mins read
5e8cb79b-2973-4513-aab9-be7713040e7b
-

பெய்­ஜிங்: சீனாவில் குழந்தைப் பிறப்புகள் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் ஆண்­டுக்கு 10 மில்லியனுக் கும் குறைந்த அளவில் இருந்து வரும் வாய்ப்பு உள்ளதாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஒரு குடும்­பத்­திற்கு இரண்டு குழந்­தை­கள் என்ற கொள்­கையை அர­சாங்­கம் விரை­வில் கைவி­டா­மல் இருந்­தால் குழந்தைப் பிறப்பு அந்த அள­வுக்­குக் குறை­யும் என்று வல்­லு­நர் ஒரு­வர் கூறி­ய­தாக உள்­ளூர் ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

ஒரு சில ஆண்­டு­க­ளுக்கு சீனா­வின் மொத்த மக்­கள்­தொகை குறை­யும் என்று குவாங்­டோங் மக்­கள்­தொகை மேம்­பாட்­டுப் பயிலகம் என்ற அமைப்­பின் இயக்கு­நர் டோங் யூஷெங், சீனா­வின் நிதித் துறை செய்தி ஊட­க­மான யிசா­யி­டம் கூறி இருக்­கி­றார்.

சீனா­வில் கடந்த 2019ல் பிறந்த புதிய குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை 580,000 குறைந்து 14.65 மில்­லி­ய­னாக இருந்­தது. 2019ல் ஆயி­ரத்­துக்கு 10.48 என்ற அள­வில் பிறப்பு விகி­தம் இருந்­தது.

இது 1949 ஆண்­டுக்­குப் பிறகு மிகக் குறைந்த ஒன்­றாக இருக்­கிறது என்­பது தேசிய புள்­ளி­வி­வர இலாகா மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

சென்ற ஆண்­டின் மக்­கள்­தொகை விவ­ரங்­கள் இனி­மேல்­தான் வெளி­யி­டப்­பட வேண்­டும்.

ஒரு குடும்­பத்­திற்கு ஒரு குழந்தை என்ற கொள்­கையை 2016ல் சீனா கைவிட்­டது. என்­றா­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, கல்வி, வீடு ஆகி­ய­வற்­றுக்­கான செலவு அதி­க­மாகி வரு­வ­தால் அதிக குழந்­தை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள தம்­ப­தி­யர் விரும்­பு­வ­தில்லை.