லண்டன்: உலகில் US$11 டிரிலியன் (S$14.7 டிரிலியன்) மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கும் முதலீட்டாளர்கள் குழுமம், கடுமையான பருவநிலை இலக்குகளை நிர்ணயிக்கும்படி கடன் அளிக்கும் வங்கிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பருவநிலை மாற்றங்களுக்கு எதிரான முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தலைவர்கள் இந்த ஆண்டில் கூட்டம் நடத்த இருக்கிறார்கள்.
அதற்கு முன்னதாக கரிமக் கழிவுகள் அளவைக் குறைப்பதற்கு உறுதியான இலக்குகளை நிர்ணயிக்கும்படி வங்கிகளை அந்த முதலீட்டாளர்கள் குழுமம் வலியுறுத்தி இருக்கிறது.

