ஜப்பானில் தொற்று அதிகரிப்பு

ஜப்பானில் தொற்று அதிகரிப்பு

2 mins read
4dc688a1-d391-446a-9a65-975dc1cfeb17
-

தோக்கியோ, ஒசாகா, கியோட்டோ வட்டாரங்களில் அவசரநிலை அறிவிக்க பரிசீலனை

தோக்­கியோ: ஜப்­பா­னின் தோக்­கியோ, ஒசாகா, கியோட்டோ வட்­டா­ரங்­களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. அத­னைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் அப்­ப­கு­தி­களில் அவ­ச­ர­நி­லையை அறி­விக்க ஜப்­பான் பரி­சீ­லித்து வரு­வ­தாக அந்­நாட்­டின் 'என்­எச்கே' தொலைக்­காட்சி நேற்று தெரி­வித்­தது.

அதி­வே­க­மாக தொற்­றக்­கூ­டிய புது­வகை கொவிட்-19 கிரு­மி­யால் புதி­தாக ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

எனவே, இந்த வாரத்­திற்­குள் ஜப்­பா­னின் தலை­ந­கர் தோக்­கி­யோ­வி­லும், இரண்­டா­வது பெரிய நக­ர­மான ஒசா­கா­வி­லும் மற்­றும் ஹியோகோ, கியோட்டோ ஆகிய வட்­டா­ரங்­க­ளி­லும் அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜப்­பா­னில் இது­வ­ரை­யி­லும் 540,000 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 9,707 கொவிட்-19 மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

தோக்­கியோ ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­கள் தொடங்க இன்­னும் மூன்று மாதங்­களே உள்ள நிலை­யில் அங்கு தொற்று அதி­க­ரிப்பு மேலும் அச்­சத்­தைத் தந்­துள்­ளது.

ஜப்­பா­னில் ஏப்­ரல் 29 முதல் மே 9ஆம் தேதி வரை ஆண்­டு­தோ­றும் பொன் வார­மா­கக் கொண்­டா­டப்­படும். இந்­தக் கால­கட்­டத்­தில் மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரித்­தால் தொற்று மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­ப­தால் அப்­போது அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒசாகா வட்­டா­ரத்­தில் ஏற்­பட்­டுள்ள நான்­கா­வது தொற்று அலை­யைக் கட்­டுப்­ப­டுத்த ஏற்­கெ­னவே முடி­வு­செய்­யப்­பட்­டுள்ள பெரிய நிகழ்ச்­சி­களை ஒத்­தி­வைப்­ப­தன் மூலம் மக்­க­ளின் நட­மாட்­டத்­தைக் குறைக்க அதி­கா­ரி­கள் திட்­ட­மி­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஜப்­பா­னின் தலை­ந­கர் தோக்­கியோ, ஒசாகா உள்­ளிட்ட 40 மாகா­ணங்­களில் 10 மாகா­ணங்­களில் ஏற்­கெ­னவே பாதி அவ­ச­ர­நிலை நட­வ­டிக்­கை­கள் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அர­சாங்­கத்­தின் உயர்­மட்ட பேச்­சா­ளர் கர்­சு­னோபு கட்டோ, மாகா­ணங்­களில் அவ­ச­ர­நிலை அறி­விக்க அனு­மதி கோரப்­பட்­டால் அந்­தக் கோரிக்­கை­கள் உட­னுக்­கு­டன் பரி­சீ­லிக்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில் ஜப்­பான், ஃபைசர் நிறு­வ­னத்­து­டன் 50 மில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­க­ளுக்­கான ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­ட­வுள்­ளது.

அத்­து­டன் மொடர்னா தடுப்­பூசி­பயன்படுத்துவது குறித்து அந்­நாட்டு மருந்­தக ஒழுங்­கு­முறை ஆணை­யம் சோதனை செய்து வரு­கிறது.