மலேசிய மாநிலங்கள் தடுப்பூசி வாங்க அனுமதி

மலேசிய மாநிலங்கள் தடுப்பூசி வாங்க அனுமதி

2 mins read
2f426109-cbcb-4456-9307-62bc873caffc
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் மத்­திய அர­சால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கொவிட்-19 தடுப்­பூ­சி­களை மாநில அர­சு­கள் இனி வாங்­க­லாம் என்று மலே­சிய கொவிட் தடுப்­பூசி நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தலைமை தாங்­கும் அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

மாநில அர­சு­கள் தடுப்­பூ­சி­களை தன்­னிச்­சை­யாக வாங்­கு­வ­தற்கு விருப்­பம் தெரி­வித்­தி­ருந்­தன. அத்­து­டன் அங்கு தடுப்­பூசி விநி­யோ­கத்­திற்கு இடை­யூறு ஏதும் ஏற்­ப­டாத வகை­யில் மாநி­லங்­க­ளுக்­குச் சாத­க­மாக இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் கைரி தெரி­வித்­துள்­ளார்.

சிலாங்­கூர் மற்­றும் சர­வாக் மாநில அர­சு­கள் தன்­னிச்­சை­யாக தடுப்­பூசி மருந்­து­க­ளைப் பெறு­வ­தற்­கான அனு­மதி கிடைப்­பது தாம­த­மா­கிறது என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வர் இப்­ரா­கிம், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (ஏப்­ரல் 20) கூறி­யி­ருந்­தார். அத­னை­ய­டுத்து அமைச்­ச­ரின் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வில் கடந்த பிப்­ர­வரி 24ஆம் தேதி தடுப்­பூசி போடும் பணி தொடங்­கப்­பட்­டது. இருப்­பி­னும் நாட்­டின் 33 மில்­லி­யன் மக்­கள் தொகை­யில் மூன்று விழுக்­காட்டு மக்­க­ளுக்கு மட்­டுமே குறைந்­த­பட்­சம், முதல் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. அங்கு, வரும் ஜூன் மாதம் தடுப்­பூசி விநி­யோ­கம் துரி­தப்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த ஆண்டு இறு­திக்­குள் மக்­கள் தொகை­யில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்குத் தடுப்­பூசி போடு­வ­தற்கு அந்­நாடு இலக்கு கொண்­டுள்­ளது.

"சிலாங்­கூர் முதல் அமைச்­ச­ரு­டன் நடத்­தப்­பட்ட உரை­யா­ட­லில், அவர், தன்­னிச்­சை­யாக தடுப்­பூசி வாங்­கும் திட்­டத்­தைத் தெரி­வித்­தார். நான் அதற்­குச் சாத­க­மான முறை­யில் பதி­ல­ளித்­தேன். ஆனால், இது­வ­ரை­யில், அந்த மாநி­லம் தன்­னிச்­சை­யாக தடுப்­பூசி வாங்­கு­வ­தற்கு அதி­கா­ர­பூர்­வ­மாக எந்­த­வொரு கடி­தத்­தை­யும் எனக்கு அனுப்­ப­வில்லை," என்று அமைச்­சர் கைரி கூறி­னார்.

மேலும் திரு கைரி ஓர் அறிக்­கை­யில், தான் சர­வாக் துணை முதல்­வர் அமர் டக்­ளஸ் உக்கா எம்­பா­ஸி­டம் இது குறித்து பல முறை பேசி­யதாகவும் அப்­போது மத்­திய அர­சாங்­கத்­தின் தடுப்­பூசி விநி­யோ­கம் சர­வாக் மாநி­லத்­திற்­குப் போது­மா­ன­தாக இருக்­கும் என்று எடுத்துக் கூறி­ய­தா­கவும் தெரி­வித்தார்.