செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
011eb4b8-e466-4cd2-8f73-ec8532cd670b
-

90 வயது மூதாட்டியிடம் $42மி. மோசடி

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் 90 வயது மூதாட்டி ஒரு­வர் மோச­டிக் கும்­ப­லி­டம் S$42 மில்­லி­யன் மதிப்­புள்ள தொகையை இழந்­துள்­ளார். சீன அதி­கா­ரி­கள் போல் நடித்து அந்த மூதாட்­டியை ஏமாற்றி அவ­ரது வங்­கிக் கணக்­கில் இருந்து பணத்தை தங்­கள் கணக்­குக்கு மாற்­றிக்­கொண்­ட­னர். கடந்த ஐந்து மாதங்­களில் 11 வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு அந்த மூதாட்­டி­யி­டம் இருந்து பணம் மாற்­றப்­பட்­டுள்­ள­தாக ஹாங்­காங் போலிஸ் தெரி­வித்­தது.

ஜான்­சன்&ஜான்­சன் தடுப்­பூ­சிக்கு அனுமதி

புரு­சல்ஸ்: ஐரோப்­பிய மருந்­தக ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் சோத­னைக்­குப் பின், ஐரோப்­பிய நாடு­களில் ஜான்­சன் & ஜான்­சன் தடுப்­பூசி பயன்­பாட்­டுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக இரத்த உறைவு ஏற்­படும் ஆபத்து உள்­ள­தா­கக் கூறப்­பட்ட இந்த மருந்து குறித்து ஆய்வு மேற்­கொண்ட ஒழுங்­கு­முறை ஆணை­யம், இரத்த உறைவு ஏற்­ப­டு­வது அரிது என்றும் அதைக்­காட்­டி­லும் நன்­மை­யே அதி­கம் என்று கூறி­யுள்ளது.