வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் கிருமி தொற்றிய ஊழியர்கள் பெரும்பாலானோர் கடல்துறையில் பணியாற்றுகின்றனர்

வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் கிருமி தொற்றிய ஊழியர்கள் பெரும்பாலானோர் கடல்துறையில் பணியாற்றுகின்றனர்

1 mins read
c08ce675-2ad0-4424-83c2-e57642bd8fb6
கிருமி தொற்றிய ஊழியர்கள் பணியாற்றும் வேலையிடங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் கிருமித்தொற்றுக்கு ஆளான 19 வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் கடல்துறையில் பணியாற்றுவதாக மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பணியாற்றும் வேலையிடங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று முன்தின நிலவரப்படி, கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்த 17 ஊழியர்களுக்குத் தொற்று உறுதி உறுதியானது. அந்த 17 பேரில் எவரும் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக டாக்டர் டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்று